
ஓஷோவின் தத்துவம்...
ஒரு உயிரை இன்னொரு உயிருக்கு இறையாக்கும் இறைவனை எப்படி நம்புகிறாய்?
இது ஓசோவின் தத்துவம் அது போல் தான் ஆளும் அரசியல் கட்சியும் அரசு அதிகாரிகளையும் ஏன் நீதிமன்றங்கள் என்ற வழக்காடு மன்றங்களையும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் இவைகள் அனைத்துமே மக்களுக்கு ஒரு போதும் பயன் தராது மக்களது எண்ணங்களையோ துன்பங்களையோ துயரங்களையோ ஒருபோதும் செவிசாய்க்கப் போவதில்லை.
தற்பொழுது ஏற்படும் கொள்ளை கொலை கற்பழிப்பு அத்தனைக்கும் காரணம் அரசியல்வாதிகளின் ஒழுக்கமற்ற செயல் ஒரு அரசியல்வாதி எத்தனை பெண்டாட்டியும் கட்டிக் கொள்ளலாம் எத்தனை வப்பாட்டியும் வைத்துக் கொள்ளலாம் சட்டம் இதற்கு என்ன சொல்கிறது இது அவனது தனிப்பட்ட விஷயம் இந்த தனிப்பட்ட விஷயத்தில் தான் நாடு நாசமாகி போனது அறிவு சார்ந்த ஆன்றோரும் சான்றோரும் இன்று தேடினாலும் கிடைப்பதில்லை.

தற்பொழுது சில தீர்ப்புகள் சிறு ஆறுதல் தருவது போல் தோன்றினாலும் கொள்ளை அடிப்பவனையும் கொலைகாரனையும் இந்திய அரசியல் சட்டம் தண்டிக்க மறுத்துவிட்டது. சட்டம் என்ன சொல்கிறது போதுமான ஆதாரம் இல்லை ஆதாரத்தை யார் கொடுப்பது அரசு அதிகாரிகள் கொடுக்க வேண்டும் ஐஏஎஸ் ஐபிஎஸ் ஆர்டிஓ டிஆர்ஓ தாசில்தார் பிடிஓ விஏஓ இவர்கள் அனைவருமே மக்களுக்கு சேவை செய்பவர்கள் அல்ல மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு லஞ்சம் பெற்று தனது மனைவி மக்களுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார்கள். இவர்கள் சம்பளத்தை காட்டிலும் லஞ்சம் வருமானம் பன்மடங்கானது சாதாரண ஏழை எளிய மக்கள் குறைகளை எப்படி தீர்ப்பார்கள்.

தற்பொழுது திமுக அமைச்சர்கள் மீது அண்ணாமலை மற்றும் பிஜேபி அடுக்கடுக்காக குற்றங்களை எடுத்து வைத்தது இதில் பொன்முடி மீது உண்மையிலேயே கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தண்டனைக்குரியது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இவருக்கு இடைக்காலத் தடை கொடுத்தது. இதேபோல் டாஸ்மாக் வழக்கில் துணை முதல்வர் உதய ஸ்டாலினை கைது செய்யும் அளவுக்கு வழக்கு சென்று கொண்டிருந்தது. இவர் கொள்ளை அடித்த பணம் அனைத்தும் தயாரிப்பாளர் என்ற போர்வையில் இவரது குடும்பத்தை சார்ந்த உறவினரிடம் போய் சேர்ந்தது.

ஆயிரம் கோடியை ED இடி கைப்பற்றியது இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றது. சுப்ரீம் கோர்ட் டாஸ்மாக் வழக்கிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை ஆதலால் இவர்கள் மீது போடப்பட்ட வழக்கை நீக்கி அவர்களிடம் இருந்த கைப்பற்றப்பட்ட பணம் சீல் வைக்கப்பட்ட அலுவலகம் அனைத்தையும் குற்றமற்றவர்கள் போல் இழுத்து மூடியது கோர்ட்டுக்கு தெரியும். இந்த ஆயிரம் கோடி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அப்படி இருந்தும் நீதிமன்றம் ஒரு வார்த்தை அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பவில்லை. இது உலகறிந்த விஷயம் ஊடகம் அறிந்த விஷயம் தர்மபத்தினி கனிமொழி டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து இந்த வழக்கை முடித்து வையுங்கள் என்று சொல்லித்தான் இந்த கேசை அமித்சாவும் நீர்த்துப் போக செய்தார். இப்பொழுது சொல்லுங்கள் சுப்ரீம் கோர்ட் யார் கைவசம் உள்ளது கீழ் கோர்ட் சென்னை ஹை கோர்ட், ஐகோர்ட் கிளை மதுரை இவைகள் எல்லாம் ஆளுபவர்களிடம் சிக்கி தவிக்கிறது.

சில நீதிமான்கள் மனசாட்சி உள்ளவர்கள் சில பேர் இருப்பதால்தான் சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் நடந்த வழக்கை நீதிமான் சுப்பிரமணியம் அய்யாவிடம் கிடைத்ததால் இதற்கு உயிர் கிடைத்தது. இல்லையென்றால் ஆளும் தரப்பில் அட்வகேட் ஜெனரல், அடிஷனல் அட்வகேட் ஜெனரல், கவர்மெண்ட் பிளீடர் இவர்கள் உண்மையில் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கி கிம்பலமும் வாங்கி மக்களை கொலை செய்யும் வழக்கிற்கு அரசு வழக்கறிஞர் என்ற போர்வையில் மனசாட்சி இல்லாமல் குற்றத்திற்கு துணை போவார்கள்.

இவர்களுக்கும் குடும்பம் இருப்பது தெரியாமல் இவர்கள் எல்லாம் செய்யும் ஈன செயல் கோர்ட் மன்னிக்கலாம் இறைவனும் இயற்கையும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நீதிமன்றமே சில தீர்ப்புகள் நீதி வழங்கியிருக்கலாம் அந்த நீதியும் புண்ணியவான்கள் நீதிமான்களாக இருப்பதால்! எல்லா நீதிபதிகளும் நல்லவர்கள் அல்ல இதில் திராவிடத்தை ஆதரிக்கும் நீதிபதிகளும் ஆரியத்தை ஆதரிக்கும் நீதிபதிகளும் இருக்கிறார்கள் சட்டம் ஒருபோதும் கடமையைச் செய்யும் அளவிற்கு இங்கு சூழ்நிலை கிடையாது.
இறைவனும் இயற்கையும் தண்டனை வழங்கும் பொழுது தான் மக்கள் திருந்துவார்கள் மீண்டும் எலக்சன் வரத்தான் போகிறது. தேர்தல் ஆணையம் ஓட்டு போடுங்கள் என்று சொல்லும் நல்லவனை காட்டு என்றால் சட்டத்தாலும் நல்லவர்களை அடையாளம் காட்ட முடியாது அனைவருமே தண்டிக்கப்பட வேண்டியவர்கள் மீண்டும் அவர்களே அரசியலில் போட்டியிடுவார்கள் எப்படி நாடு திருந்தும்? தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் அருணா ஜெகதீசன் வழங்கிய தீர்ப்பு அறிக்கை இன்றைய முதல்வராக இருக்கும் ஸ்டாலின் நிறைவேற்றினாரா? கனிமொழி கண்டு கொண்டாரா? எப்படி மறந்து போக முடியும்? மக்கள் மறந்து போவார்கள் மீடியாக்கள் மறந்து போகும் மனசாட்சி உள்ள மனிதன் எவரும் மறக்க மாட்டார்கள் மன்னிக்க மாட்டார்கள். நானும் மனசாட்சி உள்ள மனிதன் ஆதலால் தான் இறை சக்தியிடம் தண்டனை கேட்கிறேன் விரைவில் 48 நாட்களில் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்.
ஆர் முருகன் ஆசிரியர் சுதந்திர இந்தியா : 9791221893
இயற்கையை போற்றுவோம்… இறைவனை போற்றுவோம்…






