
வீரன் அழகு முத்துகோன் பிறந்த நாள்
வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து போராடி பீரங்கயை வாயில் வைத்து பிளந்தாலும் தன் உரிமையை விட்டு தந்திட மாட்டோம். அடிமைப்பட்டு உயர் வாழ்வதைவிட சுதந்திர மனிதனாய் உயிர் விடுவோம் என்றுதன் உயிரை இழந்த மாவீரன் அழகு முத்துகோனுடைய பிறந்த நாள் ஜீலை 11. விடுதலை போராட்டத்துக்கு முதன் முதலாக விதை விதைத்தவர் வீரன் அழகு முத்துகோனை தமிழக ஜனதாதளம் போற்றி வணங்குகிறது. இப்படிப்பட்ட மாபெரும் சுதந்திர போராட்ட வீரனை இன்றைய தமிழக மாணவர்கள்/ இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பாடபுத்தகங்களில் அவருடைய வரலாற்றை பாடமாக வைக்க வேண்டுமென தமிழக அரசை, தமிழக ஜனதாதளம் (TJD) கேட்டுக் கொள்கிறது.






