
உசிலம்பட்டி:புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து உசிலம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பிருந்து தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ஊர்வலமாக உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இதே போன்று, செல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்த போராட்டங்களின் காரணமாக உசிலம்பட்டி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உசிலம்பட்டி:
புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, மத்திய அரசை கண்டித்து உசிலம்பட்டியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

புதிய தொழிலாளர்கள் விரோத சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பிருந்து தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து ஊர்வலமாக உசிலம்பட்டி பாரத ஸ்டேட் வங்கிக்கு சென்று வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். இதே போன்று, செல்லப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 200 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.
இந்த போராட்டங்களின் காரணமாக உசிலம்பட்டி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.