
சாமநாதத்தில் ரூ.14.85 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை.
மதுரை.
மதுரை மாவட்டம் பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி மற்றும் விளாங்குடி ஆகிய 5 இடங்களில் ரூ.14.85 கோடி மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டட கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாவட்டம், பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி மற்றும் விளாங்குடி ஆகிய 5 இடங்களில் ரூ.14.85 கோடி மதிப்பீட்டிலான புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜையை , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்
இன்று (06.07.2025) தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவிக்கையில்:
அரசு நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தி அதன் மூலம் பொது மக்களுக்கு எளிமையாக சேவைகளை வழங்கும் விதமாக பல்வேறு புதிய அலுவலக கட்டட கட்டுமான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. நேற்றைய தினம் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் புதிய வட்டாரவளர்ச்சி அலுவலக கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய தினம் மதுரை மாவட்டம் பொதும்பு, காதக்கிணறு, சாமநத்தம், கருப்பாயூரணி மற்றும் விளாங்குடி ஆகிய இடங்களில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டிடங்கள் 5355 சதுரஅடியில் கட்டப்படவுள்ளது.

சார்பதிவாளர் அலுவலக கட்டடம், இ.முத்திரை, கணினி அறை, அலுவலக பகுதி, பதிவு அறை, பல்நோக்கு/மதிய உணவு அறை, காத்திருப்போர் பகுதி மற்றும் சுகாதார வளாகம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கும். நிர்வாக ஒப்புதல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மிகவிரைவில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார், துணைப் பதிவுத்துறை
தலைவர் (மதுரை மண்டலம்) டாக்டர்.வி.எ.ஆனந்த் , செயற்பொறியாளர் பொதுப்பணித்துறை (கட்டடம்) காமராஜ் அவர்கள், உதவி செயற்பொறியாளர் அருண் , திமுக ஒன்றியச் செயலாளர் தனபால், துணைச் செயலர் ராஜேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.