
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கடும் வெயிலை பொருட்படுத்தாத மக்கள்.
மதுரை.
மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கடும் வெயிலை பொருட்படுத்தாமல், வாகனங்களில் முருக பக்தர்கள் வந்து குவிந்தனர்.
மாநாட்டுக்கு போடப்பட்ட இருக்கைகள் பொது மக்கள் கூடையாக பிடித்து நாற்காலிகளில் அமர்ந்திருந்தனர்.

பிற்பகலில் கடும் வெப்பம் குறைந்து குளிர்ந்து காற்று வீசியது.
வெளி மாவட்டங்களிலிருந்து பஸ்கள், கார்கள், வேன்களில் முருக பக்தர்கள் வந்தனர்.
மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஆட்டோக்கள், மினி வேன்களில் பக்தர்கள் வந்தனர்.
மாநாட்டு திடலில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் மாநாட்டு திடல் அருகே அமைக்கப்பட்டுள்ள அறுபடை முருகன் கோயிலை தரிசித்தனர்.
மாநாட்டையொட்டி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மதுரை பாண்டி கோயிலிலிருந்து, மாநாட்டு திடல் வரை சாலை இருபுறங்கள் காவிக் கொடி கட்டப்பட்டுள்ளன. போலீஸார் சாலைகளில் சில இடங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகளை அமைத்துள்ளனர்.