
இராமநாதபுரம் மாவட்ட 2026 தே.மு.தி.க சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்.
மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா வாழ்த்து.
ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாவட்ட மகளிர் அணி செயலாளர் செல்வி பரமக்குடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும்,மாவட்ட அவைத் தலைவர் ராமநாதன் திருவாடானை சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும்,தலைமைச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணைச் செயலாளர் அசோகன் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள 4 சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கும் மாவட்டச் செயலாளர் சிங்கை ஜின்னா வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், மாவட்ட,நகர்,ஒன்றிய,பேரூர், ஊராட்சி,கிளை மற்றும் வார்டு தே.மு.தி.க நிர்வாகிகள் அனைவரும் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக முழு ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.







