August 8, 2025
தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சக பணி அலுவலர் சங்கம் நிர்வாகி நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சக பணி அலுவலர் சங்கம் நிர்வாகி நன்றி தெரிவித்தார்.

மதுரை:

தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய கோரிக்கைகளை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர் 1.1. 2025 முதல் 2% சதவீத அகவிலைப்படியை வழங்கியதற்கும், 1.10. 2025 முதல் ஒப்படைப்பு விடுப்பு (சரண்டர் ) வழங்கியதற்கும், பண்டிகை கால முன்பணமாக ரூ. 10,000 த்திலிருந்து ரூ.20,000 ஆக வழங்கியதற்கும், கல்வி முன் பணமாக தொழிற்கல்விக்கு ஒரு லட்சமாகவும், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்விக்கு ரூபாய் 50 ஆயிரமாக உயர்த்தி வழங்கியதற்கும்,
அரசு அலுவலர் இல்ல திருமணம் முன்பணமாக ரூபாய் 5 லட்சம் ஆக உயர்த்தி வழங்கியதற்கும் , ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 500 லிருந்து ஆயிரமாக வழங்கியதற்கும், ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணமாக ரூபாய் 4000 இருந்து 6000 ஆக உயர்த்தி வழங்கியதற்கும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் கோவை மாவட்டத்தின் சார்பிலும், தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சு பணி அலுவலர் சங்கத்தின் மாநில மையத்தின் சார்பிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருமாறு , ப.தேசிங்குராஜன் மாநிலத் தலைவர் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் பணி அலுவலர் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *