
பண்ணைக் காடு GH அருகில் மெயின்சாலையில் உள்ள பள்ளங்களை சீர்செய்து உயிர் பலி ஏற்படாமல் பொதுமக்களை பாதுகாத்திட கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பண்ணைக்காடு அரசு மருத்துவமணை மற்றும் பண்ணைக்காடு கிளை நூலகம் அருகில் மெயின்ரோட்டில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கிறது.
இந்தச் சாலையில் இருபுறமும் உள்ள பள்ளங்ள் விபத்துகள் ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. விபத்துக்கள் ஏற்படாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும் எனவும் இந்த சாலையில் உள்ள ஆபத்தான பள்ளத்தை அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உடனே இந்த பள்ளத்தை மூடிவிட்டு இந்த சாலையில் விபத்துக்கள் உயிர் பலிகள் ஏற்படாமல் அரசு அதிகாரிகள் பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.
சமூக ஆர்வலர்கள் பல மாதங்களாக புகார் செய்தும் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால் இன்று வரை பண்ணைக்காடு GH அருகில் உள்ள பள்ளங்களை மூடாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.