May 5, 2025
திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருவாய்

திருப்பரங்குன்றம் கோயில் உண்டியல் வருவாய்

மதுரை, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு உண்டியல்கள் மூலம் ரூபாய் 72.லட்சம் 39ஆயிரத்து 338 காணிக்கையாக கிடைத்தது. மேலும், 245 கிராம் தங்கமும், 3 கிலோ, 760 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 40 நிரந்தர உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்களில் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் தங்களது வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பணம் மற்றும், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த வகையில், உண்டியல்கள் நிரம்பியதும் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்பட்டு வருகின்றது. அந்த வகையில், கோவில் அறங்காவலர் குழு தன் தலைவர் ப.சத்யபிரியாபாலாஜி, துணை ஆணையர் சூரியநாராயணன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் யாவும் திறந்து எண்ணப்பட்டது.

கோவில் உள்துறை சூப்பிரண்டுகள் சுமதி,சத்தியசீலன், அலுவலக சூப்பிரண்டு ரஞ்சனி, கோவில் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன் பேஷ்கார்கள் புகழேந்தி, நெடுஞ் செழியன்,உட்பட கோவில் ஊழியர்கள், சிவாகாம வேத பாடசாலை மாணவர்கள், திருப்பரங்குன்றம் பக்தர் பேரவையினர்.மற்றும் திருப்பரங்குன்றம் அருள்மிகு ஆண்டவர் சுப்பிரமணிய சுவாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஆகியோர் உண்டியல் எண்ணும்பணியில் ஈடுபட்டு இருந்தன.

ரூ.72,39லட்சம் வருமானம் கிடைத்தது. உண்டியலில் 72லட்சத்து 39ஆயிரத்து 338 ரூபாய் ரொக்கமாக கிடைத்தது. மேலும் , 245கிராம் தங்கமும், 3கிலோ 760கிராம் வெள்ளியும்
கிடைத்தது.

உண்டியல்கள் எண்ணும் பணிகளை திருக் கோவில் நிர்வாகம் சார்பாக ஏற்பாடு
செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.