
உலக காச நோய் தீவு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் தேனி அரசு மருத்துவமனை மற்றும்மருத்துவக் கல்லூரியில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு தேனி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற காசநோய் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் கொடியசைத்து துவங்கி வைத்தார்.
மேலும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட விழிப்புணர்வு நிகழ்வில் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்.காசநோய் இல்லாத நிலையை அடைந்த ஒன்பது ஊராட்சிகளுக்கும்,காசநோய் ஒழிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய தேனி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு, பாராட்டு சான்றிதழும்,பாராட்டு கேடயமும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மரு. இரா.இராஜ பிரகாஷ் துணை இயக்குனர் (காச நோய் பிரிவு) வரவேற்புரை ஆற்றினார்.மருத்துவ கல்லூரி முதல்வர் வாழ்த்துரை வழங்கினார்.மேலும் பேச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி வீ.கீர்த்திகா காசநோய் விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையுரையாற்றினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நலகல்வியாளர் வேல்முருகன் செய்திருந்தார்.