April 19, 2025
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 10.3.2025 திங்கட்கிழமை தொடங்கி 14.3.2025 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்களுக்கு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் முகாமில் சிறுநீரக சிகிச்சை மற்றும் மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணேஷ் அரவிந்த் , சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் என்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டு முகாமில் பங்குபெற்ற நோயாளிகளுக்கு இலவச ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

சர்க்கரை நோயினால் ஏற்படும் சிறுநீரக நோய், உயர் இரத்த அழுத்தம், கை கால் வீக்கம், தற்காலிக சிறுநீரக பாதிப்பு, நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு, ரத்த சுத்திகரிப்பு, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆலோசனைகள் மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்தம் கலந்து சிறுநீர் கழித்தல், சிறுநீரக கல் தொந்தரவு, சிறுநீரக கிருமி தொற்று, சிறுநீரக புற்றுநோய்,ஆண்மை குறைபாடுகள் போன்ற நோய்களுக்கு சிறப்பு இலவச ஆலோசனைகளும், முகாமில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசோதனைகளும் செய்யப்படுகிறது.

மேலும் ரூ.1500 க்கு பார்க்கப்படும் சிபிசி, யூரியா கிரியேட்டின், யூரின் ரொட்டின், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், யூ.எஸ்.ஜி அப்டமன், சிறுநீர் பரிசோதனைகள் சலுகை விலையில் ரூபாய் 500 க்கு செய்யப்படுகிறது.

மேலும் இம்மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, 24 மணி நேர இரத்த சுத்திகரிப்பு மற்றும் லேப்ராஸ்க்கோபி மூலம் டோனர் நெப்ரக்டமி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இம்முகாமில் 200க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மேல்சிகிச்சைக்காக 85 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.