
பழனியில் வரி பாக்கி செலுத்தாததால் பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் நகராட்சிமூலம் ஜப்தி நடவடிக்கை.
பழனி நகராட்சிக்கு செலுத்தவேண்டிய குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவை நீண்ட நாட்களாக செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதன்காரணமாக கடந்த 2017ம் ஆண்டுமுதல் 2024-2025ம் நிதியாண்டு வரையில் 71லட்சம் ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளனர். இதையடுத்து வரி பாக்கியை செலுத்த வலியுறுத்தி பழனி நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் 2024-25ம் ஆண்டு நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில் நகராட்சிக்கு சொலுத்தவேண்டிய 71லட்சம் ரூபாய் வரிபாக்கியை செலுத்தாத மருத்துவமனை நகராட்சி சார்பில் ஐப்தி நோட்டிஸ் வழங்கப்பட்டது மருத்துவமனை அலுவலகத்திற்கு நகராட்சி பொறியாளர் ராஜவேல் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஐப்தி நோட்டீசை வழங்கினர்.
இதுவரை வரி செலுத்தாதால் அந்நிறுவனத்தின் சொத்துகளை ஜப்தி செய்ய நகராட்சி அதிகாரிகள் ஜப்தி நோட்டீஸ் வழங்கி, ஜப்தி செய்ய நகராட்சி வாகனம், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருடன் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது