
ஈரோட்டில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த ஆசிரியர் கைது
ஈரோடு, கோபி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தலைமறைவாக இருந்த வேதியியல் ஆசிரியர் சந்திரசேகரன் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் சந்திரசேகரன் பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதால், பள்ளி தலைமை ஆசிரியர் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதம் புகார் அளித்தார். இதன் பின்பு தலைமறைவான சந்திரசேகரன், கர்நாடகாவில் இருப்பதாக சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது.