
சாலையை கடக்க முற்பட்ட போது மயிர் இழையில் உயிர் தப்பிய அரசு பள்ளி மாணவன் சிறு காயங்களோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.
ஸ்ரீபெரும்புதூர் பிப்ரவரி 17
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப் பள்ளியில் ,பென்னலூர், இருங்காட்டுக்கோட்டை,தண்டலம், கீவளூர், மேவலூர் குப்பம் ,வளர்புரம் மண்ணூர்,நெமிலி , கிறிஸ்தவ கண்டிகை, நயப்பாக்கம் ,செட்டி பேடு, பாப்பான் சத்திரம் ,செம்பரம்பாக்கம், உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்துசுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் 101 ஜமீன் தண்டலம் அரசு மேல்நிலைப்பள்ளி சென்னை டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாலையில் தினந்தோறும் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 500 வாகனங்கள் சாலை கடந்து செல்கின்றன இது மட்டுமின்றி அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை மண்ணூர் பிள்ளைப்பாக்கம் கீவளூர் ஆகியவை தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் தொழிற்சாலைக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன.
இப்படி ஒரு ஆபத்தான சூழல் உள்ள தண்டலம் பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிக்குச் செல்ல மாணவன் சாலை கடக்க முற்பட்ட போது அசுர வேகத்தில் வந்த பெங்களூரிலிருந்து சென்னைக்கு செல்லும் தனியார் சொகுசுப் பேருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மாணவனை இடித்து விட்டு நிற்காமல் சென்று விட்டது இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட மாணவனை அங்குள்ள பொதுமக்கள் மீட்டு தண்டலம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மாணவன் :கதிர் அழகன் வயது 12 நயப்பாக்கம் ,ஏழாம் வகுப்பு அரசு மேல்நிலைப்பள்ளி தண்டலம், தந்தை :கிருபாகரன் 38 -தாய்:எஸ்தர் ராணி 34, அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள தண்டலம் பேருந்து நிறுத்தத்தில் அருகில் பள்ளிக்கூடம் உள்ளது என்பதற்கான அறிவிப்பு பலகை ஒன்று வைக்க வேண்டும் மற்றும் பழுதடைந்துள்ள சிக்னல் சரி செய்து போக்குவரத்து காவல்துறையினர் நியமிக்கப்பட வேண்டும் என்பது மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.