March 3, 2026
பழனியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

பழனியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வங்கத்து சிங்கம் என அழைக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்தநாள் விழா தமிழ்நாடு தேவர் பேரவை மாநில தலைவர் முத்தையா தேவர் ஆணைக்கிணங்க பழனியில் நிறுவப்பட்டுள்ள நேதாஜி அவர்களின் திருஉருவ சிலைக்கு மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் பசும்பொன் கார்த்திக் தலைமையில் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தேவர் தேசம் திண்டுக்கல் மாவட்ட நிருபர் பாலசுப்பிரமணி, நகரச் செயலாளர் தங்கப்பாண்டி, நகர இளைஞரணி செயலாளர் விவேக், வைகை, பிரகாஷ், முத்துக்குமார் பிரசாந்த் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

பழனி நிருபர் : நா.ராஜாமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *