July 25, 2025
தாராபுரம், இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி, சாலை பாதுகாப்பு வாகன பாதுகாப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

தாராபுரம், இந்திராகாந்தி மெட்ரிக் பள்ளி, சாலை பாதுகாப்பு வாகன பாதுகாப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திரா காந்தி மெட்ரிக் பள்ளி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்கும் வகையில் அறிவிப்பு பதாகைகளை ஏந்தி, சாலை பாதுகாப்புக்கு குரல் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இப்பேரணி பொள்ளாச்சி ரவுண்டானா தொடங்கி, அண்ணா சிலை வரை நடைபெற்றது பின்னர் அண்ணா சிலை அருகில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு குறித்து சொற்பொழிவு, நாடகம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்வை தாராபுரம் காவல் துணை கண்காணிப்பாளர், திரு சுரேஷ்குமார், தாராபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜாராம், மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் , கண்காணிப்பாளர் அமிர்தராஜ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஷாஜி ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பித்தனர். பள்ளி முதல்வர் அமலி பிரியதர்ஷினி “மாணவர்கள் மனதில் ஏற்படும் மாற்றமே, நாளைய தலைமுறையின் மாற்றத்திற்கு வழிவகுக்கும். நாளைய இந்தியாவில் சிறந்த சாலைப்பாதுகாப்பை இன்றைய குழநதைகளின் இந்த விழிப்புணர்வு பேரணி மூலம் மக்கள் மனதில் பதிய வைத்து தொடர்ந்து சாலை பாதுகாப்பு காவலர்களை தொடர்ந்து சாலை பாதுகாப்புக்கு குரல் கொடுப்போம்” என்று கூறி, சாலைப் பாதுகாப்பு காவலர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் அவர்கள் இப்பேரணியை சிறப்புடன் ஒழுங்கு செய்த பள்ளி தாளாளர் A.N.சொக்கலிங்கம், பள்ளி முதல்வர் R. அமலி பிரியதர்ஷினி, ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மகேஸ்வரி இதர ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டி திருக்குறள் புத்தங்களை வழங்கி நன்றி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

| ChromeNews by AF themes.