![மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.27] காலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனைப்பட்டா, பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், அந்த மனுக்களில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, இந்த கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு, தலா 13,500 ரூபாய் மதிப்பிலான, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களும் என, மொத்தம் 13 பயனாளிகளுக்கு, 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனித்தா ஆகியோர், கலந்து கொண்டனர்.](https://sudandiraindia.com/wp-content/uploads/2024/11/WhatsApp-Image-2024-11-27-at-4.59.34-PM-1024x600.jpeg)
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், இன்று [நவ.27] காலையில், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனைப்பட்டா, பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், அந்த மனுக்களில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, இந்த கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு, தலா 13,500 ரூபாய் மதிப்பிலான, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களும் என, மொத்தம் 13 பயனாளிகளுக்கு, 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனித்தா ஆகியோர், கலந்து கொண்டனர்.
மாற்றுத் திறனாளிகளுக்கான, சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கா.ப. கார்த்திகேயன், மாற்றுத் திறனாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை, நேரடியாக பெற்றுக் கொண்டார். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் மொத்தம் 100 மனுக்கள் பெறப்பட்டன. வீட்டுமனைப்பட்டா, பேட்டரி பொருத்தப்பட்ட மூன்று சக்கர வாகனம், வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள், அந்த மனுக்களில் இடம் பெற்றிருந்தன. தொடர்ந்து, இந்த கூட்டத்தில், 3 பயனாளிகளுக்கு, தலா 13,500 ரூபாய் மதிப்பிலான, தக்க செயலிகளுடன் கூடிய திறன் பேசிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 9 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, எழுத்துக்களை பெரிதாக காட்டும் உருப்பெருக்கிகளும், 5 பயனாளிகளுக்கு தலா 2 ஆயிரம் மதிப்பிலான பிரெய்லி கை கடிகாரங்களும் என, மொத்தம் 13 பயனாளிகளுக்கு, 95 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனி துணை ஆட்சியர் ஜெயா, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் இலக்குவன்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், திறன் உதவியாளர் லட்சுமணன், பேச்சு பயிற்சியாளர் அனித்தா ஆகியோர், கலந்து கொண்டனர்.