February 23, 2026
1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ( BIG TECH ) தொழிற்சாலை திறப்பு விழா..முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று அனைத்து மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைத்தார்…

1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ( BIG TECH ) தொழிற்சாலை திறப்பு விழா..முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று அனைத்து மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைத்தார்…

ஸ்ரீ பெரும்புதூர் டிசம்பர் 05 :-

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப் பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கவர் கண்ணாடி உற்பத்திக்கான ( BIG TECH ) தொழிற்சாலை திறப்பு விழா இன்று நடைபெறுகிறது.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பங்கேற்று அனைத்து மின்னணு சாதனங்களுக்கான உலகத் தரம் வாய்ந்த முன்-கவர் கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தித் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த தொழிற்சாலையில் இந்தியாவில் முதல்முறையாக, செல்போன் டிஸ்ப்ளே, டெம்பர் கிளாஸ் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கான முன்பக்க கண்ணாடியை தயாரித்து துல்லியமான கண்ணாடி பதப்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1003 கோடி ரூபாய் முதலீட்டில் 840 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பாரத் இன்னோவேடிவ் கிளாஸ் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் ( BIG TECH ) தொழிற்சாலை நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினருமான கு.செல்வப் பெருந்தகை அவர்களிடம் திருப்பரங்குன்றம் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது

1.கேள்வி :திருப்பரங்குன்றத்தில் ஏற்பட்ட சர்ச்சைக்கு காரணம்..

பதில்: இவை அனைத்தும் ஆர் எஸ் எஸ் பிஜேபியின் தூண்டுதலின் சதி வேலை திருப்பரங்குன்றத்தில் கீழே கந்தர் மேலே சிக்கந்தர் உள்ளார்கள் எனவும் மற்றும் ஆறுபடை வீடுகளாக இருக்கக்கூடிய பழனி ,திருத்தணி, பழமுதிர்ச்சோலை, திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், உள்ளிட்ட ஆறுபடை வீடுகள் இருக்க திருப்பரங்குன்றத்தில் மட்டும் தீபம் ஏற்றும் பிரச்சினை குறித்து இவர்கள் முயற்சிப்பதன் காரணம் இங்குள்ள மக்களிடையே கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கம் கொண்டுள்ளதாகவும் இங்கு தீபம் ஏற்ற வந்தவர்கள் வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்தவர்கள் எனவும் இவர்கள் பிஜேபி ஆர் எஸ் எஸ் இன் தூண்டுதலால் வந்தவர்கள் எனவும் கூறினார்.

2.கேல்வி:அங்கு இருக்கும் வியாபாரிகளின் கடை அடைப்பு குறித்து கேட்டபோது..

பதில்: இங்குள்ள மக்கள் அனைவரும் இந்து முஸ்லிம் கிறிஸ்டின் என அனைவரும் ஒத்துமையாக உள்ளவர்களை இவர்களிடையே கலவரம் ஏற்படுத்தவும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றவும் நினைக்கிறார்கள் இங்கு அது நடக்காது எனவும் தமிழக முதல்வர் இதற்கு இடம் கொடுக்க மாட்டார் என கூறினார்.

3.கேள்வி :உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து உங்களது கருத்து..
பதில்: உயர்நீதி மன்றத்தின் இப்படி ஒரு தீர்ப்பு மன வருத்தத்தை அளிக்கிறது எனக் கூறினார்
4.கேள்வி :நாடாளுமன்றத்தின் ஒத்திவைப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது

பதில்: இது தொடர்பாக தமிழகத்தின் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என் அனைவரும் இதுகுறித்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *