
போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் அன்பாடும் முன்றில் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக போதை விழிப்புணர்வு மன்றம் சார்பாக விழிப்புணர் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி இவாஞ்சலின் தலைமை தாங்கினார். முதுகலை பொருளாதார ஆசிரியர் பொன்னுச்சாமி வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சாஸ்திரி நகர் மருத்துவமனை மருத்துவர் வெங்கடேஷ் அவர்கள் கலந்துகொண்டு போதைப் பொருள்கள் மற்றும் அவற்றினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமான கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நன்றி உரையினை போதைப் பொருட்கள் ஒழிப்பு மன்ற ஆசிரியர் திரு பாபு சங்கர் ஆற்றினார்.






