
வாடிப்பட்டியில் ஜெயலலிதா நினைவு தினம்..!
வாடிப்பட்டி, டிச.6-
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் அ.தி.மு.க அலுவலக வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு பேரூர் செயலாளர் டாக்டர் அசோக்குமார் தலைமை தாங்கி மாலை அணிவித்து மெளன அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.
பேரூர் துணைச் செயலாளர் சந்தன துரை, பேரவை இணைச் செயலாளர் ஆர்.எஸ். ராமசாமி.பேரவை பேரூர் செயலாளர் தனசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கவுன்சிலர் இளங்கோவன் வரவேற்றார்.
இதில் வார்டு செயலாளர்கள் ராஜேந்தி ரன், பாண்டி, ரங்கராஜன், ராஜா ,ரங்கராஜன், கோட்டையன், சிவசுப்பிரமணி, திருப்பதி முத்துப்பாண்டி, சரவணன் பாரத் சங்கு, லில்லி, ஞானசேகரன், நிலாமோகன் பிரகாஷ், சரவணன் மற்றும் பேரூர் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேல்முருகன் நன்றி கூறினார்.






