March 2, 2026
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பில் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பில் சங்கதன் ஸ்ரீஜன் அபியான் அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூர், நவம்பர் : 26.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சார்பில் சங்கதன் ஸ்ரீ ஜன் அபியான் அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவரும் காஞ்சி மாவட்ட பொறுப்பாளருமான அருள்ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னால் சுகாதாரத்துறை அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரகு ஷர்மா ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் மற்றும் நிகழ்ச்சி பொறுப்பாளர் குரோம்பேட்டை அசோகன், சிறுபான்மை துறை மாநிலதலைவர் ஐயப்பன், வட்டார தலைவரும் மாவட்ட பொறுப்பாளருமான நிக்கோலஸ் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இப்பார்வையாளர்கள் கூட்டத்தில் மறைந்த காங்கிரஸ் கமிட்டி காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அளவூர் நாகராஜ் அவர்கள் வகித்து வந்த மாவட்ட பொறுப்பினை பூர்த்தி செய்வதற்கான ஆலோசனை கூட்டமாக நடைபெற்றது.

நிருபர் :ஓ.முத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *