
வில்லானேந்தல் ஜெய் ஸ்ரீ அழகுவள்ளி அம்மன் திருக்கோவில் பௌர்ணமி பூஜை அன்னதானம்….
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் வில்லானேந்தல் கிராமத்தில் தொடர்ந்து 30 வருடங்களாக குத்து விளக்கு பூஜை நடந்து வருகிறது.
அழகு வள்ளி அம்மன் வழிபாட்டு குழுவின் சிறப்பான பணிகள் அழகு வள்ளி அம்மன் வழிபாட்டு குழு தங்களது பக்தி, ஒற்றுமை மற்றும் சேவையால் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.
அம்மனின் அருளால் ஆண்டு தோறும் நடைபெறும் விழாவை அவர்கள் மிகுந்த பக்தியுடன் சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
விழா நாட்களில் ஆலய அலங்காரம், தீப ஒளி அலங்காரம், பூஜைகள் என அனைத்தும் அற்புதமாக நடைபெறுகிறது.
குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து, பக்தர்களுக்கு தண்ணீர், பிரசாதம் மற்றும் மாபெரும் அன்னதானம் தொடர்ந்து வருகிறது.
அம்மன் மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையும், பக்தியும் சமூகத்திற்காக செய்யும் சேவையும் இவர்களின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் புதிய தலைமுறையினரையும் இணைத்து, பாரம்பரியத்தை தொடர்வது இவர்களின் முக்கிய நோக்கமாகும்.
அம்மனின் மகிமையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பஜனை, ஆன்மிக போன்றவை நடத்தப்படுகின்றன.
பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளும் வகையில் விழா உற்சாகமாகவும், ஒழுங்காகவும் அமைக்கப்படுகிறது.
அழகு வள்ளி அம்மன் வழிபாட்டு குழு பக்தி மட்டுமின்றி, சமூக ஒற்றுமைக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது.
அம்மனின் அருளால் இவர்களின் இந்த ஆன்மிகப் பயணம் என்றும் சிறக்கட்டும் என்பது அனைவரின் பிரார்த்தனையாகும்.
பௌர்ணமி நாளன்று சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது பக்தர்களின் மனங்களில் நிலைத்திருக்கும் அருள்மிகு ஜெய் ஸ்ரீ அழகுவள்ளி அம்மன் திருக்கோவில் சக்தியின் வடிவமாகவும், அருளின் ஊற்றாகவும் திகழும் இந்தத் திருத்தலத்தில் பல ஆன்மிக நிகழ்வுகள் நடைபெற்று, கிராமத்தையே பக்தி பேரொலியால் ஆழ்த்துகின்றன.
அம்மன் கோவிலில் பௌர்ணமி நாளன்று சிறப்பு பூஜை மிகுந்த பக்தி சிறப்புடன் வருடம் முழுவதும் நடைபெறுகின்றது.
இதனை முன்னிட்டு, ஆலயத்திற்கு தரிசனம் செய்ய வந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு, கிராம பொதுமக்கள் சார்பில் அன்னதானம் , தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் அனைவரும் அம்மன் அருளைப் பெற்ற மகிழ்ச்சியுடன், அன்னதானத்தில் பங்கேற்று திருப்தியடைந்தனர்.
இந்த அன்னதான சேவை வெறும் உணவளிப்பாக அல்லாமல், “அம்மன் சக்தி, அருளின் ” மற்றும் “கருணையின் வெளிப்பாடு” எனக் கருதப்படுகிறது.
கிராம மக்கள், “அம்மன் அருளால் அனைவருக்கும் நலமும் வளமும் பொங்கட்டும்” என்ற புனித நோக்கத்துடன் வருடம் முழுவதும் பௌர்ணமி நாட்களில் இதனை நடத்தி வருகின்றனர்.
ஜெய் ஸ்ரீ அழகுவள்ளி அம்மன், சகல சித்திகளையும் அருளும் தெய்வீக சக்தியின் உருவமாக . நோய்கள், துன்பங்கள், தடைகள் அனைத்தையும் நீக்கி, ஆரோக்கியம், குடும்ப ஒற்றுமை, செல்வ வளம், கல்வி, தொழில், வியாபார வெற்றி, சந்தோஷம், அமைதி போன்ற பல நன்மைகளையும் கிடைக்கப் பெறுகின்றனர்.
பக்தர்கள் “அம்மனை பக்தியுடன் வழிபட்டால் நிச்சயமாக வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் நிலைக்கும்” அம்மனின் அருளை உணர்ந்த பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர்.
இந்நிகழ்வை சிறப்பாகச் செய்து வரும், ஆதரவளிக்கும் இளைஞர்கள் பொதுமக்கள் . “அம்மன் அருளால் அனைவருக்கும் நலமும் வளமும் உண்டாகட்டும்” கிராம பொதுமக்கள் பக்தர்கள், அழகு வள்ளி அம்மன் வழிபாட்டு குழு AV அம்மன் குரூப்ஸ் அனைத்து பக்தர்களும் வருக அம்மனின் அருள் பெறுக.






