
ஆளும் அரசுக்கு சாதகமாக இருந்தால் வீடா...?
அவர்கள் எந்த தவறை சுட்டிக் காட்டினார்கள்…?
திமுகவை ஆதரித்தால் இலவச வீடா…?
பத்திரிகையாளர்களுக்கு ஜாக்பாட் ஸ்டாலின் அரசு கொடுத்த பரிசு..
குறிப்பிட்ட ஒரு சங்கத்தை சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டும் ஸ்டாலின் அரசு வீடு ஒதுக்கி உள்ளது.
இந்த பத்திரிகையாளர்கள் யார் என்று நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள்…?
சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் 2 உட்பட மாற்றத்துக்கான ஊடகவியலாளர் மையம் என்று அசிப் நடத்தும் அமைப்பை சேர்ந்த 11 உறுப்பினர்களுக்கு முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, மற்றும் திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் பல்வேறு ஊடகங்களில் பணியாற்றும் 33 பத்திரிகையாளர்களுக்கு அடுத்த கட்டமாக வீடு ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை மாநகரத்தில் வீடில்லாமல் வசிப்பதற்கு வீடு வேண்டும் என்று முறையாக விண்ணப்பித்து காத்திருப்பு பட்டியலில் ஏராளமான பத்திரிகையாளர் இருக்கும்போது திமுகவை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் இருக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சேர்ந்த பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அரசாங்கம் வீடு வழங்கியுள்ளது.
இந்த பத்திரிகையாளர் எப்படி அரசாங்கம் செய்கின்ற தவறுகளை பற்றி பேசுவார்கள்….?
உண்மையாக உழைக்கும் எத்தனையோ பத்திரிகையாளர்கள் மக்கள் நலனுக்காக செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர், அவர்கள் யாரும் உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லையா..?
பாரபட்சம் இல்லாமல் ஆளும் திமுக அரசு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை எளிய பத்திரிக்கையாளர்களுக்கு இந்த உதவியை செய்ய வேண்டும் என்று ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கையாக கேட்டுக் கொள்கிறது.
வி. எம். தமிழன் வடிவேல்.
பொதுச்செயலாளர்.
ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம்.
சென்னை.
9445272820,9840192820.






