
அலங்காநல்லூர் அருகே பெரிய ஊர் சேரியில் பாரத ரத்னா டாக்டர் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா..
அலங்கால்லூர், அக்:8.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பெரியஊர்சேரியில் ட்ரீம் பாய்ஸ் நற்பணி மன்றத்தின் இருபதாம் ஆண்டு துவக்க விழாவும் பாரத ரத்னா டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் 94-வது ஆண்டு பிறந்தநாள் விழாவும் நடந்தது . பெரிய ஊருசேரி முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். முத்துராஜா ட்ரீம் பாய்ஸ் நற்பணி மன்ற தலைவர் ,ராஜபிரபு முன்னால், கவுன்சிலர் , சுவாமிநாதன் தேசிய வலிமை நாளிதழ் ஆசிரியர் வரவேற்றனர்.
ரஞ்சித் குமார் தேசிய விருது பெற்றமாற்றுத்திறனாளிகளுக்கான, தடகளப் பயிற்சியாளர் தேசிய நல்ல அரசியல் விருது பெற்ற உடற்கல்வி ஆசிரியர் டாக்டர் காட்வின், கலைஅமுதா, பெரியசேரி பள்ளி தலைமை ஆசிரியை முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ரமேஷ் சிந்தனைவளவன், அதிவீரபாண்டியன் , சந்திரசேகரன், முன்னாள் ஒன்றியக்
கவுன்சிலர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
விழாவில், பத்மஸ்ரீ வேதவாசன், பாலன் ,அமுதன் , அகிலாண்டேஸ்வரன் ராஜன் குருசாமி ,ராஜா மாரிகுமார் பூந்துலாய் சிறந்த கல்வி கலை விளையாட்டு மற்றும் சமூக சேவைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 19 வருடங்களாக ட்ரீம் பாய்ஸ் நற்பணி மன்றம் அமைப்பின் மூலம் சமூக சேவை செய்து வருகின்றனர்.
இந்த 78 வது சுதந்திர தின விழாவில், சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகள் மாற்றுத்
திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டியில் சர்வதேச அளவில் தேசிய அளவில் வெற்றி
பெற்ற வீரர்களுக்கும் ஊக்கத்தையும் வழங்கினார்.
ஒன்றிய அளவில் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஊக்கத்தையும் வழங்கப்பட்டது .






