September 12, 2026
பாண்டியராஜபுரத்தில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது..

பாண்டியராஜபுரத்தில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது..

வாடிப்பட்டி, அக்.1 –

யூ.எஸ்.ஐ.பி.மனித உரிமைகள் அணி தேசிய தலைவர்
செல்வகணேசன் உத்தரவுப்படி, மாநிலத்தலைவர் தன்ராஜ் வழிகாட்டுதலின்படி மாநிலச் செயலாளர் யாசர், மாநில துணை செயலாளர் தனுஷ் அறிவுறுத்தலின் படியும், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், மனித உரிமைகள் அணி இணைந்து கொண்டாடப்பட்டது.

இந்த விழாவிற்கு, கொடைக்கானல் நகர மனித உரிமைகள் அணித்தலைவர் அமுல்ராஜ் தலைமை தாங்கினார்.

திண்டுக்கல் நகர மனித உரிமைகள் அணி உறுப்பினரும் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் ராமராஜ், சங்கத்தின் பொருளாளர் பரணி ராஜ் சங்க இணைச்செயலாளர்
சசிகுமார் முன்னிலை வகித்தார்.

சங்கத் தலைவர் லெட்ச்சர்கான் சாகுல் ஹமீது வரவேற்றார்., இந்த விழாவில், ஆசிரியர்கள் பி.ஜி. ராஜா ,கஸ்தூரி ஆகியோருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சோனை, தீபன், பாலச்சந்தர்,சரவணன், பெரியசாமி, ரமேஷ் ,வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் மனித உரிமைகள் அணி கார்த்திக், கொடைரோடு ராஜலிங்கம், தர்மத்துப்பட்டி திருப்பதி, நல்லமநாயக் கன்பட்டி ராஜா, ஆத்தூர் கருப்புசாமி, நாகல் நகர் கோபாலகிருஷ்ணன், திண்டுக்கல் பாஸ்கர், பஞ்சம்பட்டி அஷ்ரப் அலி, நத்தம் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், சங்க துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *