
காரியாபட்டி அருகே, குண்டாற்று பகுதியை பா.ம.க தலைவர் அன்புமணி ஆய்வு செய்தார் :
காரியாபட்டி ,செப்:30 –
பா.ம.க. தலைவர் அன்பு மணி ராம்தாஸ் தமிழக மக்கள் உரிமை மீட்பு நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
மதுரை யிலிருந்து சிவகாசி நடை பெற்ற மீட்பு நடை பயணம் நிகழ்ச்சிக்கு செல்லும் வழியில்,
காரியாபட்டி அருகே வக்கணாங் குண்டு குண்டாற்று பகுதியை அன்பு மணி பார்வையிட்டார்., அதன் பிறகு அங்கு கூடியிருந்த விவசாயிகளை சந்தித்து பேசினார்.
அதன் பிறகு செய்தி யாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்: அப்போது அவர் கூறியதாவது:
மிகவும் பின் தங்கிய பகுதிகள் வளம் பெறுவதற் காக கடந்த 2008ம் ஆண்டு காவேரி குண்டாறு இணைப்பு திட்டம் தி.முக. அரசால் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு அதிமுக ஆட்சியில் திட்டம் நிறை வேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டு துவங்கி வைக்கப்பட்டது.
தற்போது, தி.மு.க ஆட்சியில் இந்த திட்டம் முழுமையாக நிறை வேற்ற நிதி ஒதுக்கீடு செய்ய வில்லை.
காவேரி ஆற்றில் வெளியேறும் சுமார் 800 கன அடி தண்ணீரை பல்வேறு மாவட்டங்களில் உள்ள கண்மாய், ஏரி, குளங்கள் பயனடை யும் வகையில் காவேரி – குண்டாறு இணைப்பு திட்டத்தை முழுமையாக நிறை வேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாநிலப்பொருளாளர் திலகபாமா, ஒன்றிய செயலாளர் ஆவியூர் பாண்டிச்சாமி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.






