March 2, 2026
அலங்காநல்லூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை..!

அலங்காநல்லூர் அருகே நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு போலீசார் விசாரணை..!

சோழவந்தான்:

மதுரை கிரைம் பிராஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் காதர் மைதீன் இவரது மகன் அபுதாகீர் (15).
இவர், மதுரையிலுள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில்,
தனது நண்பர்களுடன் சேர்ந்து அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியிலுள்ள 70 அடி விவசாய கிணற்றில் குளிக்க சென்றார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக அபுதாகீர் கிணற்றில் மூழ்கினார்.

நண்பர்கள் தேடியும் அபுதாகீர் கிடைக்காததால் இது குறித்து, அலங்காநல்லூர் தீயணைப்புத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்புதுறையினர் சம்பவ இடம் விரைந்து கயிறு மற்றும் கொக்கிகள் மூலம் சுமார் 6 மணி நேரம் கிணற்றில் இறங்கி இறந்த மாணவர் அபுதாகீர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மாணவன் இறப்பு குறித்து, அலங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *