February 25, 2026
சாயல்குடி அருகே ஒச்சத்தேவன் கோட்டை கண்மாய் அணை பழுது – மக்கள் குரலாக நாம் தமிழர் கட்சி மனு..!

சாயல்குடி அருகே ஒச்சத்தேவன் கோட்டை கண்மாய் அணை பழுது – மக்கள் குரலாக நாம் தமிழர் கட்சி மனு..!

இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம் நாம் தமிழர் கட்சி கடலாடி மேற்கு மாவட்டச் செயலாளர் சதாம் உசேன் அவர்கள் தலைமையில், இன்று ஒச்சத்தேவன் கோட்டை மற்றும் காணிக்கூருக்கு பாத்தியப்பட்ட கண்மாய் நீர்த்தேக்க தடுப்பு அணை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளதால், இனிவரும் மழைக்காலங்களில் நீரை தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை குறித்து மனு அளிக்கப்பட்டது.

சேதமடைந்த அணையை விரைவில் சரி செய்வதற்கான மனு, அந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கும், உங்களுடன் முதல்வர் திட்டத்தில் கலந்து கொண்ட துணை தாசில்தார் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அவர்கள் விரைவில் பழுது பார்த்து தருவதாக உறுதியளித்தனர்.

இந்நிகழ்வில், ஒச்சத்தேவன் கோட்டை கிளை பொறுப்பாளர் நாகநாதன், மீனவர் பசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், மாநில தகவல் தொடர்பு பசறை செயலாளர் அருள்ராஜ், நாம் தமிழர் கட்சி கிளை உறவுகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *