
மதுரை மாவட்ட கோயில்களில் நவராத்ரி விழா...
மதுரை :
மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், நவராத்ரியை முன்னிட்டு அம்மன் பல்வேறு அலங்காரத்தில் காட்சி அளித்தார்.
பட்டிவீரன் பட்டி மாரியம்மன் கோயில், மதுரை அண்ணாநகர் தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வைகை காலனி வைகை விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர், கோமதிபுரம் ஜூப்பிலி டவுன் ஞான சித்தி விநாயகர் கோயில், வைகை காலனி, மேற்கு சக்தி மாரியம்மன் ஆலயத்தில் நவராத்ரியை ஒட்டி, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

சோழவந்தான் ஜெனைகை மாரியம்மன், ஜெனி நாராயணப் பெருமாள், திரௌபதியம்மன், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், இன்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருவேங்கடம் ஏடகநாதர் கோயில்களில் நவராத்ரி விழா வையை ஒட்டி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.






