
இபிஎஸ் தான், விஜயை எதிர்க்கட்சிய இடத்தை நிரப்ப வைக்கப் போகிறார். -எம்பி மாணிக்கம் தாகூர் பேட்டி..!
மதுரை:
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை திருநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், மாநில திசா கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மதுரை விமான நிலைய நில விரிவாக்க பணிகள் குறித்து நானும், மதுரை எம்பி வெங்கடேசனும் இதுகுறித்து கேள்வி எழுப்பினோம்.
விமான நிலையத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்த வேண்டும் அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட விரிவாக்க பணிகள் விரைந்து நடைபெற்ற நிலையில் எட்டு மாதங்களாக தொய்வு ஏற்பட்டுள்ளது.
கடந்த முறை நடைபெற்ற விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தில் அப்போதைய மாவட்ட ஆட்சியர் சங்கீதா குண்டாறு திட்டத்தின் கீழ் நீர் போக்குவரத்துக்காக 66 கோடி ரூபாயில் திட்டம் கொண்டுவரப்பட்டது.
அதனால் இந்த திட்டத்தில் மாற்றம் தேவைப்படுகிறது என்பதால், ஆறு முதல் எட்டு மாதங்களாக எந்த ஒரு முன்னெடுப்பும் இல்லாமல் இருந்ததை நேற்றைய கூட்டத்தில் வலியுறுத்தினோம்.
அதற்கு முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதற்குப் பிறகு நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன், நான் மற்றும் தோழர் வெங்கடேசன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினோம். உடனடியாக நிதித்துறை செயலாளர் மற்ற துறை அதிகாரிகளிடம் பேசி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
மதுரை விமான நிலையத்திற்கான கிடப்பில் உள்ள நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்தப்பட உள்ளது.
மிக விரைவான அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது மாவட்ட ஆட்சியரிடமும் அதற்காக துறை அதிகாரிகளுடன் நித்துறை செயலாளர் பேசி துரித நடவடிக்கை எடுக்க உறுதியளித்திருக்கிறார்.
துப்புரவு பணியாளர்கள் குறித்த கேள்விக்கு : மிக நியாயமான கோரிக்கை சிஐடியு மற்றும் ஐஐடியுசி தோழர்களும் அவர்களுக்கு பின் இருக்கிறார்கள்.
மதுரையை தூய்மையாக வைத்துக் கொள்ள இரவு பகல் பாராமல் உழைக்கின்ற அவர்களின் கோரிக்கைக்கு அவர்களுடன் இருப்போம்.
ஜிஎஸ்டி மாற்றியமைத்தது புரட்சி என நிர்மலா சீதாராமன் கூறியது குறித்த கேள்விக்கு:
நிர்மலா சீதாராமனை பொறுத்த அளவில் 2017ல் 7 லட்சம் கோடி வசூல் செய்ததாக சொல்லியிருந்தார். இந்த ஆண்டு 22 லட்சம் கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லி இருக்கிறார்.
இதில் என்ன புரட்சி என்று தெரியவில்லை. மக்களிடம் அதிக பணம் பிடுங்குவது தான் புரட்சியா. மக்களிடம் பணத்தை பிடுங்கி விட்டு அழுத்தத்தின் பெயரில் குறைப்பதற்காக தினந்தோறும் விளம்பரம் கொடுக்கிறார்கள்.
ஜிஎஸ்டியில் புரட்சி செய்து விட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால், இன்னும் சிறுகுரு வியாபாரம் செய்பவர்கள் ஜிஎஸ்டி கொடுமையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் பிரச்சனை குறித்து பேச தயாராக இல்லாத நிர்மலா சேர்த்தாராமன் இப்படி புரட்சி கொடுத்து பேசுகிறார். புரட்சிக்கான அர்த்தம் அவருக்கு தெரியவில்லை என்று தான் தெரிகிறது.
மோடி அரசு தான் தவறான ஜிஎஸ்டியை கொண்டு வந்தது அதிக வரி கொடுப்பதற்கு காரணமே இந்த அரசு தான் தற்போது அதை குறைத்து புரட்சி செய்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.
வேறு யாராவது வரி கூட்டி இருந்து அதை குறைத்து இருந்தால் புரட்சி. நீங்களே வரியை உயர்த்தி விட்டு அதை குறைத்தால் புரட்சி என்று எப்படி சொல்ல முடியும் திருத்தம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
செய்திருக்கும் தப்புக்கு திருத்தம் செய்திருக்கிறீர்களே தவிர புரட்சி என்று சொல்லக்கூடாது தமிழில் வார்த்தை கிடைக்காதால் நிர்மலா சீதாராமன் புரட்சி என்று சொல்லி இருப்பார்.
இந்திரா காந்தி ஆட்சியில் வரி அதிகமாக்கப்பட்டது குறித்த கேள்விக்கு:
பெரும் பணக்காரர்களுக்கு வரியை குறைத்தது மோடி அரசு.
எங்களைப் பொருத்தவரை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அம்பானி, அதானிக்கு வரியை உயர்த்துவோம் என்பது எங்கள் கொள்கை.
அவர்களைப் பொறுத்த அளவில் பெரும்பணக்காரர்களுக்கு வரியை குறைப்பது தான் அவர்களின் கொள்கை.
சிறு வியாபாரிகளின் வருகை குறைத்து வரியில்லாமல் ஆக்குவது தான் எங்கள் கொள்கை ஆனால், இப்போது உள்ளவர்கள் சிறு வியாபாரிகள் மீது வரியை அதிகப்படுத்தி பெரும் பணக்காரர்களுக்கு வரியை குறைக்க வேண்டும் என்பதுதான் கொள்கை.
விஜயின் பரப்புரையில் பங்கேற்கும் கூட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு இருந்தால் வரக்கூடிய தேர்தலில் மாற்றம் என்பது குறித்த கேள்விக்கு: கூட்டம் கூடுவது மற்றும் வாக்கு வருவது என்பதற்கான வித்தியாசம் நமக்கு தெரியும்.
2014 இல் நடிகர் கார்த்தி எங்களுக்காக சிவகாசியில் பிரச்சாரத்திற்கு வந்தார்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்தது.
ஆனால், வாக்கு பெட்டியை திறக்கும் போது தான் அதிர்ச்சி காத்திருந்தது. அதனால் கூட்டம் என்பது வேறு, வாக்கு என்பது வேறு. தமிழக வெற்றிக் கழகத்தை பொறுத்தளவில் உண்மையில் வாக்கு பெறப்போகிறதா மாற்றம் வருமா என்பது அண்ணன் பழனிச்சாமி கையில் உள்ளது.
அவரின் தவறுகள்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்காக மாறப் போகிறது. முகத்தை மூடுவதில் தொடங்கிய அமித்சாவிடம் அதிமுகவை அடகு வைத்து, நம்பகத்தன்மை இல்லாத வார்த்தைகள் பேசி, முன்னுக்குப் பின் முரணான வார்த்தைகளை பேசி இபிஎஸ் தான் விஜயை எதிர்க்கட்சிய இடத்தை நிரப்ப வைக்கப் போகிறார்.
தேவர் பெயரை வைக்க வேண்டும் என ஈபிஎஸ் கூறியது குறித்த கேள்விக்கு:
இதையெல்லாம் யாரும் நம்ப போறதில்லை அவர் நான்காண்டுகள் முதல்வராக இருந்தபோது அதை குறித்து மூச்சு விடவில்லை அப்போதும் இதே போல் தான் அமித்ஷாவிடம் அடிமை சாசனம் எழுதி கொடுத்து இருந்தார்.
அப்போது பசும்பொன் தேவருக்கு விமான நிலையத்தில் பெயர் வைக்க வேண்டும், பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என சொல்லியிருக்கலாம்.
அப்போது இதைப்பற்றி பேசவில்லை அவரைப் பொறுத்த அளவில் அவரை நம்பகத்தன்மை தான் பிரச்சனை.
எப்போது முகத்தை மூடுவார், எப்போது என்ன செய்வார் என யாரும் நம்ப முடியவில்லை. அதுதான் விஜய் அவர்களுக்கு பலமாக இருக்கப் போகிறது.
விசா கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு:
மோடியும் ட்ரம்பும் உறவானவர்கள் என நேற்று மோடி சொல்லி இருந்தார். அவர்களுக்கு உறவு இருக்கலாம் ஆனால் இந்திய இளைஞர்கள் தான் அவர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
மோடிக்கும் அதானிக்கும் ஆன உறவுதான் முக்கியமாக தெரிகிறது.
ஆனால் மேற்படிப்புக்காகவும் வேலை வாய்ப்புக்காகவும் h1b விசாவை பயன்படுத்தி பல இளைஞர்கள் செல்வது வழக்கம்.
அவற்றில் கட்டுப்பாடு விளைப்பது இந்திய இளைஞர்கள் வாழ்க்கையில் பெரிய பாதிப்பை உருவாக்கும். இதைப் பற்றி மோடி பேசப்போவதில்லை.
அவரை ஏற்கனவே அவருக்கு தனிப்பட்ட உறவு தான் முக்கியமே தவிர இந்தியாவை நல்லனுக்காக இல்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் பேசும்போது கூட 50% வரி குறித்து மோடி பேசவில்லை. திருப்பூரில் ஏற்றுமதி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அதன் தாக்கமாக மதுரையில் கள்ளிக்குடியில் பாண்டியன் என்பவர் திருப்பூரில் இருந்து வேலைகளை எடுத்து செய்து வருகிறார்.
ஆனால் ஒரு வாரத்திற்கு மேலாக அவரிடம் 26க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ள நிலையில் எந்தவித வேலையும் இல்லை என சொல்கிறார்.
இது மோடிக்கும், நிர்மலா சீதாராமனுக்கும், பியூஸ் கோயலுக்கும் முக்கியமில்லை. அவர்களைப் பொறுத்த அளவில் தலைப்பு செய்திகளை சமாளிக்க வேண்டும்.
டிரம்புக்கு மோடி பரிசு கொடுத்தார் என்பதுதான் முக்கியமே தவிர இந்திய மக்களுக்கான நலனை பற்றி யோசிக்காமல் தனிப்பட்ட பிஆர்க்காக இதை செய்கிறார்கள்.
ஆன்லைனில் வாக்காளர்களை நீக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் கூறியது குறித்த கேள்விக்கு:
நல்லவேளையாக இன்றாவது தேர்தல் ஆணையம் பதில் சொல்லியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொல்வது என்னவென்றால் ஆன்லைனில் சமர்ப்பித்து, ஒடிபி வந்த பிறகு வாக்காளரை நீக்குவதற்கான வேலை தொடங்குகிறது.
ஆனால், சரி பார்க்காமல் அதை செய்வது தான் பிரச்சனை. அலன்த் தொகுதியில் 6000 பேருக்கு விண்ணப்பம் வந்திருந்த போது காங்கிரஸ் கட்சி பூத் ஏஜென்ட் உஷாராகி வேட்பாளரிடம் சொல்லி தாசில்தாரிடம் கேள்வி எழுப்பினார்.
அதன் பிறகு நேரடியாக சென்று இது குறித்து சரி பார்த்த பிறகு நீக்க வேண்டும் என சொன்னார்கள். அதன் பேரில் நேரடியாக சென்று சரிபார்த்ததால்தான் 5900 நபர்களின் வாக்குகள் காப்பாற்றப்பட்டது.
இந்த நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சனை.
இந்த நடைமுறை குறித்து வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் பிரச்சனை. கர்நாடகா சிஐடி எலக்சன் கமிஷனிடம் நீக்கப்பட்ட வாக்காளர்களின் கோரிக்கை வந்தபோது எந்த ஐபி அட்ரஸிலிருந்து வந்தது என கேட்டதற்கு அது குறித்து தேர்தல் ஆணையம் எந்தவித பதிலும் சொல்லாமல் இருப்பதால்தான் பிரச்சனை வருகிறது.
இது போன்ற தவறுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராகுல் காந்தி சொல்கிறார். தப்பே நடைபெறவில்லை எனக் கூறி முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பதால் தான் பிரச்சனை வருகிறது.
தேர்தல் ஆணையம் நியாயமாக இருந்தால் தான் இந்தியாவின் மக்களாட்சி காப்பாற்றப்படும். இந்த விதங்களில் தான் பாஜகவின் ஓட்டு திருட்டு நடைபெறுகிறது என எடுத்துக்காட்டுவது தான் எங்களின் வேலையாக உள்ளது.
நேபால் ஜென்சி மாணவர்களுக்கு ஆதரவளிப்பதாக ராகுல் காந்தி மீது வந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, ஜென் இசட் மாணவர்கள் குறித்து, ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை. வாக்குத் திரட்டு விவகாரத்திற்கு பிறகு அவர் சொன்னது ஜென் Z மாணவர்கள் இதை பார்க்க வேண்டும். இது போன்ற பிரச்சனைகளில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, இளைஞர்களிடம் பேசி இருந்தார். இப்படிப்பட்ட பிரச்சனை இருக்கிறது என சென் இசட் க்கு சொன்னார்.
அதை பாஜகவினர் திரித்து நேபாளுக்கு உள்ளதாக பேசுவது தவறான கருத்து என
கூறினார்.






