March 2, 2026
காரத்தொழுவில் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

காரத்தொழுவில் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

மடத்துக்குளம் அடுத்துள்ள காரத்தொழுவு கிராமத்தில் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டுக்கல்பாளையம் பகுதியிலிருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.

அப்பகுதியிலிருந்து பள்ளிக்கு வருவதற்கு போதுமான பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி உடுமலை – தாராபுரம் சாலை காரத்தொழுவு சுங்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். கடந்த கல்வி ஆண்டில் மாணவர்கள் வசதிக்காக பேருந்து இயக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், 10 நாட்கள் மட்டுமே பேருந்து தங்கள் ஊருக்கு வந்ததாகவும் , இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே பேருந்து இயக்கப்படவில்லை எனவும் கூறுகின்றனர்.

காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பள்ளி முடிந்து மாலை வீடு திருப்பும் போது பேருந்து வசதி இல்லாமல் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக கூறுகின்றனர். இந்நிலையில் தகவல் அறிந்த கணியூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி பேருந்து இயக்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *