March 2, 2026
மஹா கும்பாபிஷேகப் பெருவிழா !பொங்கலூர்' பிரபஞ்ச பீடம், தவத்திரு. பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமிகள் அருளாசி வழங்கினார்கள்.

மஹா கும்பாபிஷேகப் பெருவிழா !பொங்கலூர்' பிரபஞ்ச பீடம், தவத்திரு. பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமிகள் அருளாசி வழங்கினார்கள்.

திருப்பூர் மாவட்டம், அழகுமலை கிராமம், சுப்பேகவுண்டம்பாளையத்தில், அற்புதமாக நடைபெற்ற அருள்மிகு விநாயகர், பட்டத்தரசி அம்மன், கருப்பண சுவாமி ஆலயங்கள் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவில், தவத்திரு. பிரபஞ்சானந்தா தெய்வசிகாமணி சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்து, பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்கினார்கள்.

அனைத்து மக்களும் வளம் பெறவும், அமைதி உலகம்! போரில்லாத சகாப்தம் உருவாகவும்,
அறம் சார்ந்த அரசியல், அருள் சார்ந்த அரசுகள் நிலை பெறவும், இவைகள் எல்லாம் நிதர்சனமாக, மக்கள் எல்லாம் நல்லுணர்வு பெற்று, தூய்மையான தொண்டும், சேவையும் செய்து, மக்களுக்கு அர்ப்பணித்துக் கொள்ளும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஓட்டளிக்கவும்,
சமுதாய தர்மத்தின் பேருண்மையை மக்களெல்லாம் உணர்ந்து, புண்ணிய பலன் பெறவும், பாவங்களிலிருந்து விமோசனம் பெறவும், மனங்கனிந்து, அர்ப்பணித்து பிரார்த்தித்துக் கொண்டு, அருளாசி வழங்கினார்கள்.

கரட்டுப்பாளையம் பழனிசாமிக் கவுண்டர், சிவத்தொண்டு சிவாச்சலம், கண்டியன் கோவில் வைஸ் மூர்த்தி, குருநாதம்பாளையம் வழக்கறிஞர் திருநாவுக்கரசு உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

ஏராளமான அன்பர்கள், பக்தர்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டு மஹா கும்பாபிஷேக விழா காட்சி கண்டு மனம் உருகி பரவசமானார்கள்.

பாலசுப்பிரமணியம், தெய்வசிகாமணி உள்ளிட்ட விழாக் குழுவினர், மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்து, இறை உணர்வின் மகத்துவத்தை, மக்களின் இதயங்களில் கொண்டு சேர்த்து மேன்மை செய்தார்கள்.

அருட்பணியில் அங்கம் வகித்த அனைவருக்கும், இறைப் பேராற்றல் கருணை மழை பொழியட்டும் !

அமைதி உலகம் மலரட்டும் !

உண்மை ஆன்மிக ஒளி உலகெல்லாம் பரவட்டும்!

திருவடிகள் சரணம் !

செய்தி தொடர்பாளர், பிரபஞ்ச பீடம் ஆசிரமம், அகில உலக ஆன்மிகப் பேரவை, வலசுப்பாளையம், பொங்கலூர், திருப்பூர்.
7010552715, 7010484843, 9865607368, 7871163116.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *