
பூமி பூஜை :
மதுரை:
ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை : வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70 க்கு உட்பட்ட பகுதிகளில், ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைப்பதற்கான பூமி பூஜையும், மற்றும் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ள பூங்காவினை, வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில், மேயர் இந்திராணி பொன்வசந்த் முன்னிலை வகித்தார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் 3 வார்டு எண்.70 பீரித்தம் தெரு, முத்துப்பாண்டி நகர் மெயின், சிறுஹரி நகர், காந்திஜி தெரு, மீனாட்சி தெரு, நர்மதா தெரு, தாமிரபரணி தெரு, கங்கை தெரு, வேல்முருகன் நகர், கம்பர் தெரு, கங்கா தெரு, வானமாமலை 1வது குறுக்குத் தெரு, போடிலைன் தெரு ஆகிய பகுதிகளில் புதிய பேவர் பிளாக் தார் சாலைகள், சிறுஹரிநகர் மெயின், சத்தியமூர்த்தி நகர், திரு.வி.க.தெரு மற்றும் நேதாஜி தெரு புதிய கான்கீரிட் சாலைகளும் என, மொத்தம் 3.545 கிலோ மீட்டர் நீளத்திற்கு 14 புதிய சாலைகள் பேக்கேஜ் 10 திட்டத்தின் கீழ் மாநகராட்சி 2025-26 ஆம் ஆண்டு பொது நிதியிலிருந்து ரூ.1.91 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அமைப்பதற்கான பணிகளை பூமி பூஜையிட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்கள்.
மேலும் மண்டலம் 3 வார்டு எண்.70 வேல்முருகன் நகர் நர்மதை தெருவில் பூங்காவில் நடைபாதைகள் அமைத்தல், கழிப்பறைகள், ஆழ்துளை கிணறு, மரங்கள் நட்டு வைத்தல், மின்விளக்குகள் மற்றும் அமரும் இருக்கைகள் வசதிகளுடன் 15-வது மூலதன நிதியிலிருந்து ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
புனரமைக்கப்பட்டுள்ள பூங்காவினை, அமைச்சர், பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில், துணை மேயர் தி.நாகராஜன், உதவி ஆணையாளர் பிரபாகரன், மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் முத்து, மாமன்ற உறுப்பினர் அமுதா, உதவிப்பொறியாளர் ரகுநாதன், மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






