
56-கோடி எங்கே ? கோவில்பட்டியில் தமிழ் விவசாயிகள் சங்கம் இன்று 15-9-2025 ஆர்ப்பாட்டம் !
2024 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகமான மழை பொழிவால் வெள்ளைச் சேதம் ஏற்பட்டு விவசாயிகள் விளைவித்த உளுந்து பாசிப்பயிர் மக்காச்சோளம் கம்பு கொத்தமல்லி மிளகாய் போன்ற அனைத்து பயிர்களும் வெள்ளத்தால் அழிந்து சாய்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வருவாய் துறை மூலமாக மழை வெள்ள சேதத்தை கணக்கெடுத்து தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் 56 கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண தொகை வழங்கப்படவில்லை முதலமைச்சர் அறிவித்த தூத்துக்குடி மாவட்டத்திற்கான வெள்ள நிவாரணம் 56 கோடி தொகை என்ன ஆச்சு இதுவரை மர்மமாகவே உள்ளது நடப்பு நிதியாண்டில் விவசாயம் விதைப்புக்கான பருவம் தொடங்கிவிட்டது.
இந்த 56 கோடியை போதாவது விவசாயிகளுக்கு வழங்கினால் விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு சிரமத்தில் கொஞ்சம் குறையும் மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு நியாயமான முறையில் வழங்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு தற்போது விதைப்புக்கான பருவ காலம் தொடங்கிவிட்டது கூட்டுறவு வங்கிகள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்களை தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு முன்பே காட்டுப்பன்றிகளால் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு அளவுக்கு மீறிய நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது அது மட்டும் இல்லாமல் விவசாயிகள் தனிமையில் காட்டுக்குச் செல்ல முடியவில்லை.
பன்றிகள் விவசாயிகளை தாக்கி விடுகிறது விவசாயிகளின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை விவசாயிகளையும் விவசாய பயிர்களையும் பாதுகாக்க வேண்டி காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த நாட்டு நாய்கள் வைத்துள்ள வேட்டைக்காரர்களை வைத்து காட்டுப் பன்றிகளை விரட்டி மலைப்பிரதேசங்களுக்கு விரட்டினால் விவசாயிகளின் உடைய பயிர்களுக்கும் சேதம் இருக்காது விவசாயிகளின் உயிருக்கும் பாதுகாப்பு இருக்கும் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த நடவடிக்கையை விவசாயிகளிடமே வழங்க வேண்டும் மற்றும் இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுக்கோரி கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநில தலைவர் OA. நாராயணசாமி தலைமையில் மாநில பொருளாளர் சுப்பாராஜ் முன்னிலையிலும் மாவட்ட தலைவர் வேலுச்சாமி (கிழக்கு) மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஓட்டப்பிடாரம் ஒன்றிய தலைவர் அழகு பாண்டி கயத்தார் வட்டார தலைவர் கிருஷ்ணசாமி கோவில்பட்டி வட்டாரம் தலைவர் படர்ந்தபுளி வெங்கடாசலபதி மற்றும் செல்லப்பா மதுரை மாவட்ட தலைவர் சீனிவாசகன் மற்றும் திரளான விவசாயிகளும் மகளிர் விவசாயிகளும் கலந்து கொண்டு வருவாய் கோட்டாட்சியர் அவர்களுடன் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தமிழ் விவசாயிகள் சங்கம் தூத்துக்குடி மாவட்டம்






