
அரசின் நலத் திட்டம் : தொடக்கம் :
மதுரை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.
அதனைத்தொடர்ந்து, தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர்.
பழனிவேல் தியாகராஜன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் .ஜே.பிரவீன் குமார் தலைமையில் மதுரை மாவட்டம், லேடி டோக் பெருமாட்டி கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், மதுரை மாவட்டத்தில் அன்புகரங்கள் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 347 குழந்தைகளில் தற்பொழுது முதற்கட்டமாக 1 முதல் 9 வகுப்பு வரை பயின்று வரும் 112 குழந்தைகளுக்கு அன்புக்கரங்கள் அடையாள அட்டையை வழங்கினார்.
மாநகராட்சி மேயர் இந்திராணி பொன் வசந்த் ,மாநகராட்சி துணை மேயர் துணை மேயர் தி.நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.






