March 2, 2026
மல்லாங்கிணறில் "பேரறிஞர் அண்ணா " பிறந்த நாள் : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப் பட்டது :

மல்லாங்கிணறில் "பேரறிஞர் அண்ணா " பிறந்த நாள் : நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஒரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப் பட்டது :

காரியாபட்டி – செப் – 16
விருதுநகர் அருகே, மல்லாங் கிணறில் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே மல்லாங் கிணறில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா நடை பெற்றது.

விழாவில், தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அண்ணா வின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதன் பிறகு, அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சி யில் , காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் கா. கண்ணன்,மாவட்ட வர்த்தக அணி செயலாளர் போஸ் என்ற ஜெயச்சந்திரன், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் துளசிதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *