March 2, 2026
நிலக்கோட்டையில் 200 மாற்றுத்திறனாளிக்கு இலவச சீருடை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

நிலக்கோட்டையில் 200 மாற்றுத்திறனாளிக்கு இலவச சீருடை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி

நிலக்கோட்டை செப்.8-

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள தமியான் வளாகத்தில் செயல்படும் லில்லியன் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நிலக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் 75 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளி 200க்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக சீருடை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தமியான் மருத்துவமனை மற்றும் பள்ளி நிர்வாகி ஆக்னேஸ்சேவியர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பாக அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சீருடைகளையும், அன்னதானத்தையும் வழங்கினார். விழாவில் மதுரை பிரித்தம் மருத்துவமனை டாக்டர் ராஜாமணி, அதிமுக கிழக்கு ஒன்றிய பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை பொறுப்பாளர் கனிக்குமார், நிலக்கோட்டை நகர பொறுப்பாளர் மோகன்குமார், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் புரட்சிமணி, முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *