
வாடிப்பட்டியில் எடப்பாடியாருக்கு அதிமுக ஆட்சி அமைய முன்னோட்டமாக செங்கோல்பரிசு முன்னாள் எம்.எல்.ஏ.,மாணிக்கம் வழங்கினார்.
வாடிப்பட்டி, செப்.5-
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு மதுரை திண்டுக்கல் நகர்ப்புற சாலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சி பயணத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.

அவருக்கு , முளைப்பாரி யுடன் ஏராளமான பெண்கள் வரிசையாக நின்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதை ஏற்றுக் கொண்டு, மக்கள் வெள்ளத்தில நடுவே எடப்பாடி பழனிச்சாமி தி.மு.க., ஆட்சியின் அவல நிலை பற்றியும் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் செயல்படுத்தப் பட்ட திட்டங்கள் பற்றி விளக்கி பேசினார்.
அதன் பின் , சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளரும் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக் குமார் சோழவந்தான் தொகுதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் வெற்றிலை மாலை அணிவித்து வெள்ளி குத்து விள்க்கு நினைவு பரிசு வழங்கினார்.
அதன்பின், அதிமுக ஆட்சி அமைய முன்னோட்டமாக முன்னாள் எம்.எல்.ஏ., அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற மாநில இணை செயலாளர் மாணிக்கம், வெள்ளி செங்கோல் மற்றும் வேட்டியும் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ.,மாநில விவசாய அணி துணைச் செயலாளர் கருப்பையா எடப்பாடி பழனிச்சாமி கல்லூரி கால புகைப்படத்தினை நினைவு பரிசாக வழங்கினார்.
அதன்பின், எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தை காணவந்த பொதுமக்களை இருபுறமும் பார்த்து கைகளை அசைத்தபடி வேனில் வந்தார். சந்தை வாசல் எதிரில் பேரூர் செயலாளர் அசோக்குமார் சொந்த இடத்தில் 54 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு 54அடி உயர கொடிக் கம்பத்தில் ரிமோட் மூலம் கொடியேற்றினார்.
அப்போது, வெற்றிலை மற்றும் நெல்கதிர் மாலைகள் அணிவிக்கப்பட்டது. பின்,
பஸ்நிலையம் முன்பு ஒன்றியச் செயலாளர் காளிதாஸ் தலைமையில் கட்சித் தொண்டர்கள் மற்றும் மகளிர் அணி செயலாளர் லட்சுமி உள்பட பேரூர் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் வரவேற்பு கொடுத்தனர். அதன்பின், வழிநெடுகிலும் 3 கி.மீ.தூரம் பொதுமக்களை பார்த்து கைகளை அசைத்தபடி உசிலம்பட்டிக்கு புறப்பட்டு சென்றார்.






