
பழனி எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவித்த விசிக கவுன்சிலர் மற்றும் பொதுமக்கள்.
பழனி அருகே ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 16வது வார்டு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் சேதமடைந்து இடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் உடனடியாக புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை கட்டி தர வேண்டும் என்று பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் அப்பகுதி பொதுமக்களும் விசிக கவுன்சிலர் சரஸ்வதி ஆகியோர் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில்
உடனடியாக ரூபாய் 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய ஒருங்கிணைந்த அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நிகழ்ச்சி நடைபெற்றன..
இந்நிகழ்வில் பேரூர் செயலாளர் சின்னதுரை மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்…






