
நிலக்கோட்டையில் இருந்து நெற்கட்டான் செவ்வயல் பூலித்தேவர் 310 வது பிறந்த தினம் முன்னிட்டு பெண்கள் ஊர்வலம் நடத்தி வழிபாடு பூவி வரவேற்ற நெற்கட்டான் செவ்வயல் பொதுமக்கள்
நிலக்கோட்டை, செப்.3-
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டைல இருந்து பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பில் மாநில பொதுச் செயலாளர் ராஜாராம் தலைமையில் இந்திய நாட்டின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரும் மாமன்னன் பூலி தேவரின் 310ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு பெண்கள் சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் நிலக்கோட்டையில் இருந்து சார்பாக புகழ் அஞ்சலி செலுத்துவதற்கும்,வீர வணக்கம் செலுத்துவதற்கும் சென்று அங்கு கொடி அசைத்து ஊர்வலமாக சென்று பூலித்தேவர் உடைய சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அப்போது அங்கிருந்த புலி தேவரின் வாரிசுகள் நிலக் கோட்டை பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பு அனைத்து நிர்வாகிகளையும் அழைத்து பூக்கள் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பின் பொருளாளர் இளங்கோ, பிரமலைக்கள்ளர்கள் கூட்டமைப்பின் அகில இந்திய ஒருங்கிணைப்பாளர் புத்தரசன், மாநில மகளிர் அணி செயலாளர் வசந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






