
என்.ஊத்துப்பட்டியில் உலக டி.என்.டி.தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்த பொதுமக்கள்
நிலக்கோட்டை, செப்.1- திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ,என். ஊத்துப்பட்டியில் உலக பழங்குடி தினமான (டி.என். டி.) முன்னிட்டு டி.என்.டி மக்களுக்கு உலக அளவிலான அங்கீகாரம் அளிக்கப்பட்டும் இந்தியாவில் இதுவரை இந்திய சட்ட அமைப்பில் விடுபட்டு போன 40 கோடி இந்திய மக்கள் பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்பில் சேர்க்க வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு சீர்மரபின நல வாரிய மாநில உறுப்பினர் சந்திரன், வைகை சமூக நல அமைப்பு இயக்குனர் அண்ணாதுரை, மதுரை சீடு நிறுவன கணிப்பொறி இயக்குனர் தீனதயாளன், நிலக்கோட்டை டி.என்.டி அமைப்பு பொறுப்பாளர்கள் கல்லூத்து பாண்டி,தேடிய செல்வம் , ராஜக்கொடி, மகளிரணி பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






