
வாடிப்பட்டியில்ஜி.கே. மூப்பனார் நினைவு தினம்.
வாடிப்பட்டி, செப்.1.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக ஜி .கே மூப்பனார் 24 வது நினைவு தினம் மாவட்ட அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி க்கு, மாவட்ட த்
தலைவர் கச்சைகட்டி பாண்டி தலைமை தாங்கி ஜி.கே. மூப்பனார் உருவப்படத்திற்கு
மா லை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினார் .
மாநில செயற்குழு உறுப்பினர் பொதும்பு செல்வம்(எ) அர்ஜுனன், வட்டாரத்
தலைவர்கள் வாடிப்பட்டி பால சரவணன், அலங் காநல்லூர் ரமேஷ் சமயநல்லூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார துணைத்
தலைவர் அர்ஜுனன் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துராமன், மாவட்ட பொதுச் செய லாளர் முத்து வழக்கறிஞர் பிரிவு அணித்
தலைவர் முருகேசன், எஸ்.சி., அணித்தலைவர் முத்து காமாட்சி, மகளிர் அணி தலைவி சாந்தி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், நகரத் தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்.






