March 2, 2026
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மதுரையில் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா :

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மதுரையில் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா :

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்தியாவிலேயே முதல் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டும் மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் உள்ள இந்திரா காலனியில் வசிக்கக்கூடிய இந்து சமய ஏழை மக்களுக்கு அன்பளிப்பாக (இலவசமாக ) களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.

விநாயகர் சிலைகளை பெற்று கொண்ட மக்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.

இந்த விழா ஏற்பாடுகளை அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்துடைய தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனை படி சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் R.சேது ராணி, லதா சண்முகபாண்டி , ஜுசி தங்கபாண்டி , விஜயா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *