March 2, 2026
மதுரையில் நெல்பேட்டையில் பொதுக் கழிப்பிடம் திறக்காமல் பொதுமக்கள் அவதி

மதுரையில் நெல்பேட்டையில் பொதுக் கழிப்பிடம் திறக்காமல் பொதுமக்கள் அவதி

மதுரை நெல்பேட்டை தயிர் மார்க்கெட் அருகே கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம், பல மாதங்களாகப் பயன்படுத்த முடியாமல் “கண்காட்சி பொருளாக” நிற்கிறது.

நெல்பேட்டை காய்கறி மார்க்கெட் மற்றும் வெங்காய மார்க்கெட் பகுதிகள் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வருகை தரும் இடமாக உள்ளது. ஆனால், இங்கு அமைக்கப்பட்ட பொதுக் கழிப்பிடம் இன்னும் திறக்கப்படாததால், குறிப்பாக வேலை செய்யும் பெண்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் பலர் திறந்தவெளியிலேயே இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் நோய் பரவும் அபாயம் அதிகரித்து, சுகாதார சிக்கல்கள் உருவாகும் நிலை எழுந்துள்ளது.

பொதுமக்கள், “மார்க்கெட் பகுதியில் ஏற்கனவே நெரிசல் மிகுந்த நிலையில் கழிப்பிடம் இல்லாதது பெரிய சிரமமாக உள்ளது. கட்டி முடித்த பொதுக் கழிப்பிடம் உடனடியாக திறக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *