
சோழவந்தானில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
சோழவந்தான் ஆகஸ்ட் 25
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக சார்பாக கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டன.
மாவட்டத் துணைச் செயலாளர் தங்கராஜ் மாவட்ட துணை செயலாளர் தொகுதி பொறுப்பாளர் பொன் யாழினி தலைமை வகித்தனர். பேரூர் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன் வரவேற்றார். வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சசி, முன்னாள் ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் கண்ணம்மா பேரூர் அவைத் தலைவர் மனோகரன், துணைச் செயலாளர் கோபால், பொருளாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி கண்ணன், டேனியல், பாண்டிச்செல்வி, செல்லப்பாண்டி, அழகர்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.






