March 3, 2026
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க ஆசிரியர்கள் கோரிக்கை.

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு(TNTET) தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க ஆசிரியர்கள் கோரிக்கை.

தமிழ்நாட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வில் எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பி.சி,எஸ் .சி உள்ளிட்ட மற்ற பிரிவினர் தேர்ச்சி பெற 82 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். இது இட ஒதுக்கீடு பிரிவினருக்கு கூடுதல் மனச்சுமை தருகிறது.

ஆனால் ஆந்திரா,தெலுங்கானா,ஒடிசா,பீகார்,நாகலாந்து,சத்தீஸ்கர் போன்ற பெரும்பாலான மாநிலங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 90 ஆகவும் BC/MBC/SC/ST/DNC/PWD ஆகிய இட ஒதுக்கீடு பிரிவினருக்கு 75 ஆகவும் உள்ளது..
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும பத்தாண்டுகளுக்கு பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண் 60 ஆக குறைத்தது ஒரு வகை ஆறுதல் கொடுத்தாலும் பி.சி,எஸ்.சி உள்ளிட்ட பிற இட ஒதுக்கீடு பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் குறைக்கப்படவில்லை.

மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு அனைத்து வகையான இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் சீராக மதிப்பெண் குறைத்து வழங்காமல் எஸ்டி பிரிவினருக்கு மட்டுமே மதிப்பெண்ணை 60 என குறைத்து வழங்கியத தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர் பணி பெறுவதற்கான தேர்வு அல்ல. இது ஆசிரியர் என்பதற்கான தகுதியை குறிக்கும் தேர்வு மட்டுமே. தமிழ்நாட்டில் அரசு ஆசிரியராக பணி நியமனம் பெற ஆசிரியர் தகுதித் தேர்வு தவிர இரண்டாவதாக மீண்டும் ஒரு போட்டித் தேர்வு எழுத வேண்டிய சூழல் உள்ளது.

எனவே முதலாவதாக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் எஸ்டி பிரிவினருக்கு மட்டும் குறைக்கப்படாமல் பி.சி ,எஸ்.சி உட்பட இதர இட ஒதுக்கீடு பிரிவினருக்கும் ஆந்திரா ஒடிசா தெலுங்கானா பீகார் சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களைப் போல ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்களை 75 ஆக குறைத்து தமிழகத்திலும் சமூகநீதி, சம உரிமை கிடைத்திடச் செய்ய வேண்டும் என்பதே பல ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான ஆசிரியர்களின் தொடர் கோரிக்கையாக உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *