
ஸ்ரீபெரும்புதூர்-கொளத்தூரில் ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயம் குடமுழுக்கு நன்னீராட்டு விழா
ஸ்ரீபெரும்புதூர் ஆகஸ்ட் 20
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள கொளத்தூர் ஊராட்சியில் கருமாரியம்மன் மற்றும் நாகமுத்து மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

35 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயம் ஸ்ரீபெரும்புதூர்-மணிமங்கலம் செல்லும் வழியில் சாலை ஓரத்தில் அமைந்திருந்ததாகவும் அவை சாலை விரிவாக்க பணி காரணமாக அகற்றப்பட்டு கிராமத்தின் உட்புறத்தில் புதிதாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிதாக அமைக்கப்பட்ட கோயிலில் இரு கருவறைகள் அமைக்கப்பட்டு கருமாரியம்மன் மற்றும் நாகமுத்து மாரியம்மன் எழுந்தருளி உள்ளனர்.
காலை 9.30 மணி அளவில் நடைபெற்ற இக்கோயில் விழாவில் யாக கூடம் அமைக்கப்பட்டு அக்னியாகும் வளர்க்கப்பட்டது அதனைத் தொடர்ந்து இரு அம்மன்களுக்கும் பூஜைகள் சிறப்பாக செய்யப்பட்டு பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
35 ஆம் ஆண்டு ஆடித்திருவிழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் விழாக்குழு :வாசு, ராமச்சந்திரன், தனசேகர் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற்றது.
நிருபர் : ஓ.முத்து






