March 2, 2026
பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானுக்கு பாராட்டு விழா

பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானுக்கு பாராட்டு விழா

வாடிப்பட்டி, ஆக:21.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞர்கள் சார்பாக ஜனாதிபதியிடம் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானுக்கு பாராட்டு விழா பொட்டுலுபட்டி சமுதாய கூடத்தில் நடந்தது.

இந்த விழாவிற்கு , பேரூராட்சித் தலைவர் மு. பால் பாண்டியன் தலைமை தாங்கி, வேலு ஆசானை பாராட்டி பேசி நினைவு பரிசு வழங்கினார். கவியரசு கண்ணதாசன் இலக்கிய பேரவை தலைவர் கவிஞர் பொன் பனகல் பொன்னையா முன்னிலை வகித்தார். இசைக் கலைஞர் ராம்மோகன் வரவேற்றார்.

இந்த விழாவில், முன்னாள் பேரூர் செயலாளர் மு.பா.பிரகாஷ் , பறை இசையின் சிறப்பு பற்றி கவிதை வாசித்தார். இதில், முன்னாள் கவுன்சிலர் அய்யாசாமி, ஹத்திம், பாலமுருகன், வீரமுத்து மற்றும் தப்பாட்ட கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில், வேலு ஆசான் ஏற்புரையாற்றி நன்றி கூறினார். இதன் ஏற்பாடுகளை, வாடிப்பட்டி தப்பாட்டக் கலைஞர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *