
கோயிலில் தேசீயக் கொடி.
மதுரை:
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ராஜகோபுரத்தில், தேசியக்கொடி ஏற்றப்பட்டது.
தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடு முதல் படை வீடான மதுரை மாவட்டம்
திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோயில் உள்ள 150 அடி ராஜ கோபுரத்தில் இன்று காலை 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
திருக்கோயில் சார்பாக துணை ஆணையர் சூரிய நாராயணன், மற்றும் ஊழியர்கள் ஏற்படு செய்து இருந்தனர்.






