March 2, 2026
மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு: ஆகஸ்ட் 21 மாபெரும் வரலாற்று திருப்புமுனை மாநாடு

மதுரையில் தவெக 2வது மாநில மாநாடு: ஆகஸ்ட் 21 மாபெரும் வரலாற்று திருப்புமுனை மாநாடு

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தலைமையில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட மாநாடு, அவர்களின் அரசியல் பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக கருதப்படுகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் விஜய் அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் வலுவான ஆதரவு, தமிழகம் முழுவதும் அவரது அடித்தள ஆதரவு நாளுக்குநாள் வலுப்பெற்று வருவதை மக்கள் மத்தியில் அவர் ஏற்படுத்திய விழிப்புணர்வும் நம்பிக்கையும் இந்த மாநாட்டின் ஊடாக வெளிப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் தலைமையில் விஜய் அவர்கள் முன்னெடுக்கும் வழியில் செயல்படும் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் தன்னலமற்ற வழிகாட்டுதலிலும் மாவட்ட கழக செயலாளர்களும் மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் சமூக நலன் மற்றும் மக்களின் நலனுக்காக முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த இயக்கத்தின் முக்கிய அம்சமாக, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் தெளிவான மற்றும் உறுதியான வழிகாட்டுதல் குறிப்பிடத்தக்கது.

தவெக தலைவர் விஜயின் இந்த மாநாடு தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது மாநில மாநாடு, மிக முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது மாநாடு நடைபெற உள்ள இடம் தென் மாவட்டத்தின் மிகுந்த அரசியல் தாக்கம் கொண்ட மதுரையில் அமைந்துள்ளது இந்த மாநாடு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அவர்களின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைவதற்கான வாய்ப்பு என கூறப்படுகிறது. அரசியல் ஊழலுக்கு மாற்றாக, நேர்மையான ஆட்சி வேண்டும் என்று எதிர்பார்க்கும் தமிழ்நாட்டிற்கு, விஜய் ஒரு புதிய நம்பிக்கையின் பேரொளியாக திகழ்கிறார். சமூக சேவையும், மாற்றத்தை உருவாக்கும் துணிவும் ஒரே நேரத்தில் இருக்கும் தலைவராக, அவரது பயணம் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று மக்கள் பெருமிதத்துடன் நம்புகிறார்கள்.

மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளராக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

விஜய் மக்கள் மனம்கவர் தலைவர் தமிழ் மக்களின் நம்பிக்கையையும், இளைஞர்களின் இதயங்களை வென்றவர் விஜய் திரைத்துறையில் தன்னை முத்திரையிட்ட விஜய், தனது சமூகப் பணிகளால் இன்று ஒரு மக்கள் நாயகனாக உயர்ந்துள்ளார். சாதாரண மக்களின் நலனுக்காக குரல் கொடுக்கத் தொடங்கிய அவரின் பயணம், இன்று அரசியல் மேடையில் பெரிய திருப்புமுனையாக மாறியுள்ளது., எளிமையான நடத்தை, நேர்மையான எண்ணங்கள், திறமையான தலைமையை கொண்டவர் விஜய். சமூதாய நீதிக்காக, மக்கள் நலத்துக்காக செயலில் இறங்கியுள்ளார்
தலைமையே எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டு, மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வர பசுமை புரட்சிக்குரிய வழியில் பயணிக்கிறார்.விஜய் நம்பிக்கையின் புதிய வரலாறு!

தமிழக வெற்றிக் கழக தொண்டர்களின் தொண்டு பணிகள் தமிழகம் முழுவதும் வேரூன்றும் நன்மையின் வேர்கள் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுகிறது தலைவரும், கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் நலமிக்க சமூகத்தின் கனவையே பிரதிபலிக்கின்றனர். அந்தக் கனவுகளை நிஜமாக்கும் பணியைச் செய்து வருகிறார்கள் கட்சி தொண்டர்கள்.

பள்ளி மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், புத்தக பை, பள்ளி உபகரணங்கள் அனைத்தையும் வழங்கினார்கள் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களது திறமையை ஊக்குவித்தனர்,மருத்துவ முகாம்கள் மருத்துவ சேவைகள் எட்டாத பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் செய்து வருகின்றனர். மருத்துவ சேவைகளை நேரில் கொண்டு செல்லும் சேவையை தொண்டர்கள் தங்களது கடமையாகவே எடுத்துள்ளனர்.

தொண்டர்களின் மேன்மை மக்கள் இயக்கத்தின் முதுகெலும்பு மாவட்டச் செயலாளர்கள் மக்கள் நலன் காக்கும் வலிமையான தூண்கள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்துடன், தன்னலமின்றி மக்கள் நலனுக்காக செயல்பட்டு, சமூக முன்னேற்றத்துக்கு வழிகாட்டி, தொண்டர்களை ஒன்றிணைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் வலிமையான தூண்களாக திகழ்கின்றனர். இவர்களின் அர்ப்பணிப்பு, பிற கட்சிகளுக்கும் எடுத்துக்காட்டாக உள்ளது.

செயல்கள் மூலம், தமிழகம் முழுவதும் “வெற்றி” என்பது வெறும் பெயர் அல்ல, அது செயலின் அடையாளம் என்பதைக் நிரூபித்துள்ளனர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். அவர்கள் செலுத்தும் நேரம், உழைப்பு, ஈடுபாடு, தியாகம் ஆகியவை அரசியலை மக்களுக்காக செயல்படும் பணியாக மாற்றுகிறது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் தூய்மையான அரசியல் நோக்கங்களை மக்களிடையே கொண்டு செல்லும் தூதர்களாக இவர்கள் திகழ்கின்றனர் தமிழக அரசியல் வரலாற்றில் புதிய நம்பிக்கை ஒளிக்கதிராகத் தோன்றியவர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். திரைப்படம் மூலமாகவே கோடிக்கணக்கான மக்களின் மனதை வென்ற அவர், இப்போது அரசியல் மேடையிலும் மக்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு மாற்றத்தை உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் துவக்க நாள் முதல் இன்று வரை, திரு. விஜய் அவர்கள் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையும், சமூக நலனையும், இளைஞர்களின் எதிர்கால நலனையும் கருதி அமைந்தவையாக இருக்கின்றன. அரசியல் என்பது பணம், படை, பலம் என்பவற்றால் அல்ல, மக்கள் பாசத்தால் நிலைத்து நிற்கும் என்பதற்கு வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டும் தலைவர் அவர் ஊழல் இல்லாத நிர்வாகம், மக்களோடு நேரடி தொடர்பு, பாதுகாப்பு போன்ற முக்கியக் கோட்பாடுகளை தனது அரசியல் செயல் திட்டங்களில் அடிப்படையாகக் கொண்டுள்ளார். வாக்குறுதிகளைக் நிறைவேற்றும் நம்பிக்கையை, அவரது முந்தைய செயல்பாடுகள் விஜய் மக்கள் இயக்கம் சமூக செயல்பாட்டை ஏற்கனவே நிரூபித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய செயலி வெளியீட்டு விழாவில் அண்ணா வழியில் செல்வோம்.1967, 1977 போல 2026 தேர்தலும் அமையும்– விஜய் உறுதி

தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அலுவலகம் பனையூரில் நடைபெற்ற விழாவில், ‘MY TVK’ என்ற புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம், உறுப்பினர் சேர்க்கை மேலும் ஸ்திரமாகும் வகையில் ‘வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு’ என்ற செயலியையும் அவர் வெளியிட்டார். இந்நிகழ்வில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த ஐந்து பேர் கட்சியின் அடையாள அட்டைகளை பெற்றனர். விழாவில் உரையாற்றிய விஜய்,
“1967, 1977 தேர்தல்களில் அசுர அதிகாரத்தை எதிர்த்து மக்கள் வெற்றி பெற்றது போல, 2026 தேர்தலும் அமையும், என உறுதியுடன் தெரிவித்தார்.

அண்ணாவின் வழியில் “மக்களிடம் செல், மக்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைபிடிப்போம் என்று தெரிவித்துள்ளார் இதன் பிறகு மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என மக்களோடு மக்களாகத்தான் இருக்கப் போகிறோம். நம்முடன் மக்கள் இருக்கிறார்கள் நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என்று தளபதி விஜய் கூறினார்

பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் பிறப்பின் அடிப்படையில் அனைத்து உயிர்களும் சமம் என்று கொள்கை நோக்கொடு ‘நல்லது செய், நேர்மையாய் வாழ் மாற்றத்திற்காக ஏங்கும் இளைய தலைமுறைக்கும், தீர்வு தேடும் மக்களுக்கும், தலைவர் விஜய் ஒரு ஒளி வெளிச்சமாக இருக்கிறார். மக்கள் மனதில் முதல்வர்’ என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் அவர், எதிர்கால தமிழகத்தின் தலைமைச்சிவிகை மீது அமரும் நேரம் தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

கட்டுரை , ஆர். மனோஜ். மதுரை 96982 59788

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *